மாநில செய்திகள்

குற்றாலத்தில் குளிக்க தடை விடுமுறை நாட்களில் வெறிச்சோடிய அருவிகள் + "||" + Deserted waterfalls during the holidays forbidden to bathe in the courtyard

குற்றாலத்தில் குளிக்க தடை விடுமுறை நாட்களில் வெறிச்சோடிய அருவிகள்

குற்றாலத்தில் குளிக்க தடை விடுமுறை நாட்களில் வெறிச்சோடிய அருவிகள்
குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் விடுமுறை நாட்களில் அருவிகள் வெறிச்சோடின.
தென்காசி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14 மற்றும் 15-ம் தேதிகளில் சுற்றுலா தலங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. 

நீண்ட நாட்களுக்கு பிறகு குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட குற்றாலம் அருவிகளிலும் கடந்த 2 நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுந்தாலும் குற்றாலத்திற்கு விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் குறைவாக இருந்தது. பலர் குற்றாலம் வந்து குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். 

இதேபோன்று சபரிமலைக்கு சென்று வந்த அய்யப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் இதனால் குற்றாலம் அருவிகள், அருவிக் கரைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடின. ஏற்கெனவே இன்று முழு ஊரடங்கு என்பதால் இன்றும் குற்றாலத்தில் குளிக்க அனுமதி இல்லை. திங்கட்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றால அருவிகளில் குளிக்க தடை: தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
2. குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதியா? - மாவட்ட நிர்வாகம் விளக்கம்
குற்றாலத்தில் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.