தேசிய செய்திகள்

ஜன.23- முதல் குடியரசு தின கொண்டாட்டம் தொடங்கும்: மத்திய அரசு அறிவிப்பு + "||" + Republic Day Celebrations Start Jan 23, Include Netaji Birth Anniversary

ஜன.23- முதல் குடியரசு தின கொண்டாட்டம் தொடங்கும்: மத்திய அரசு அறிவிப்பு

ஜன.23- முதல் குடியரசு தின கொண்டாட்டம் தொடங்கும்: மத்திய அரசு அறிவிப்பு
சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் பிறந்த நாள் 1897- ஆம் ஆண்டு ஜனவரி 23- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி,

இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளான 1950- ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தில் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி கொடியேற்றி முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிடுவார். 

ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் குடியரசு தின கொண்டாட்டங்கள் ஜனவரி 24 ஆம் தேதியே  தொடங்கிவிடும். இந்த ஆண்டு முதல் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. அதாவது குடியரசு தின விழாவுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையும் மத்திய அரசு இணைத்துள்ளது.  

அதன்படி ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேதாஜி பிறந்த நாள் 'வலிமை தினமாக' (பரக்ரம் திவாஸ்) மத்திய அரசு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம்
மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘பயோ மெட்ரிக்’ பதிவு நிறுத்தம்
கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘பயோ மெட்ரிக்’ பதிவு நிறுத்தப்படுகிறது.
3. அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதா? - மத்திய அரசு விளக்கம்
அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
4. எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது: ராகுல் காந்தி
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்த மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5. உத்தர பிரதேசம், மராட்டியத்தில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள்: மத்திய அரசு
உத்தர பிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளத்தில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.