மாநில செய்திகள்

குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது - தமிழக அரசு ​அறிவிப்பு + "||" + Kamaraj Award for Kumari Ananthan - Announcement by the Government of Tamil Nadu

குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது - தமிழக அரசு ​அறிவிப்பு

குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது -  தமிழக அரசு ​அறிவிப்பு
2022ஆம் ஆண்டிற்கான 'அய்யன் திருவள்ளுவர் விருது' மு.மீனாட்சி சுந்தரத்திற்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 சென்னை,
 
ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருநாளையொட்டித் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உணர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப்பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்றத் தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட சில விருதுகளைப் பெறத் தகுதியானவர்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி 2021 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருது குமரி அனந்தனுக்கு வழங்கப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது . காமராஜருடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் அரசியல் தலைவர்களுள் ஒருவர் குமரி அனந்தன். 
.
2022ஆம் ஆண்டிற்கான 'அய்யன் திருவள்ளுவர் விருது' மு.மீனாட்சி சுந்தரத்திற்கு வழங்கப்படும்  என  தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெங்களுருவில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு  முதன்மையானவர் மீனாட்சி சுந்தரம்.

விருது பெரும் 2 பேருக்கும் ரூ .1 லட்சம் மற்றும் 1 சவரன் தங்க பதக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.