தேசிய செய்திகள்

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் + "||" + Punjab polls: Congress issues first list; Channi to contest from Chamkaur Sahib, Sidhu from Amritsar East

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்:  முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
அமிர்தசரஸ்,

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. 

அதேவேளையில், காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை இந்தக் கூட்டணி அளிக்கும் எனத்தெரிகிறது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கியுள்ளது. 

பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், 86 தொகுதிகளுக்கான முதல்  கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.  

அதில் முதல் மந்திரி சரண் ஜித் சன்னி சம்குர் சாகிப் தொகுதியிலும், மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அதேபோல், , மோகா தொகுதியில் சோனு சூட்டின்  சகோதரி மாளவிகா சூட் போட்டியிட உள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசில் இருந்து யார் விலகினாலும் கவலையில்லை, சேர்ந்தாலும் கவலையில்லை - அசோக் கெலாட்
காங்கிரசில் இருந்து யாரேனும் விலகினாலும் கவலையில்லை, காங்கிரசில் சேர்ந்தாலும் கவலையில்லை என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
2. உத்தர பிரதேச முதல் கட்ட தேர்தல்; காங். கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
உத்தர பிரதேச முதல் கட்ட தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
3. காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்
காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
4. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக விரோத நடவடிக்கை: காங்கிரஸ் கடும் கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
5. இந்தியாவின் பாரம்பரியத்தை அழிக்க யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது - சோனியா காந்தி
நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பாரம்பரியத்தை வலுவிழக்கச் செய்ய வெறுக்கத்தக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சோனியா காந்தி கூறினார்.