தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தாத சிறுவர்களுக்கு பள்ளிக்குள் அனுமதியில்லை: அரியானா அரசு + "||" + Unvaccinated children in the 15 to 18 age group will not be allowed to enter schools: Haryana minister Anil Vij

தடுப்பூசி செலுத்தாத சிறுவர்களுக்கு பள்ளிக்குள் அனுமதியில்லை: அரியானா அரசு

தடுப்பூசி செலுத்தாத சிறுவர்களுக்கு பள்ளிக்குள் அனுமதியில்லை: அரியானா அரசு
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் தற்போது அரியானாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
சண்டிகார்,

நாடு முழுவதும் 15-18 வயதினருக்கு கடந்த  3 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளிலேயே பெரும்பாலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கி இரு வாரங்களே ஆகியுள்ள போதிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிறார்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. 

சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அரியானாவில் 15-18 வயது வரம்பிலான சிறுவர்கள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பள்ளிக்கு வர அனுமதியில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் போது இந்த அறிவுறுத்தலை அனில் விஜ் விடுத்துள்ளார். 

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிக்குள் வர அனுமதி அளிக்கப்படும்” என அனில் விஜ் கூறியதாக அம்மாநில அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் தற்போது அரியானாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.