மாநில செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு: 6ம் சுற்று நிறைவு: 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம்..!! + "||" + Palamedu Jallikkattu 6th round completed

பாலமேடு ஜல்லிக்கட்டு: 6ம் சுற்று நிறைவு: 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம்..!!

பாலமேடு ஜல்லிக்கட்டு:  6ம் சுற்று நிறைவு: 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம்..!!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 6ம் சுற்று நிறைவுபெற்று உள்ளது. 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன; 28 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
மதுரை

மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.முன்னதாக பாலமேடு கிராம கமிட்டி மகாலிங்க சாமி கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர். 

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளையர்களுக்கு போக்குக் காட்டிய காளைகளுக்கும் கட்டில், பீரோ, தங்கக் காசு உள்ளிட்ட பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே 11.30 மணியளவில் வாடிவாசல் பின்பகுதியில் காளைகளை சட்டவிரோதமாக அவிழ்த்து விட முயன்ற நபர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில்  6 சுற்றுகளில் இதுவரை 545 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.180 மாடுபிடி வீரர்கள் பங்குபெற்று உள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

பிடித்து பார் என சவால்விட்டு காளைகள் பாய்ந்து வருகிறது. அடக்கியே தீருவேன் என களத்தில் மாடுகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர்.

பிரபாகரன் என்பவர் 18 மாடுகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள் 2 பேர் வெளியேற்றப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 3வது ஆண்டாக அதிக காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற பிரபாகரன்..!
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 மாடுகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.
2. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவு: 221 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன..!!
பாலமேடு வாடிவாசல் பின்பகுதியில் காளைகளை சட்டவிரோதமாக அவிழ்த்து விட முயன்ற நபர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
3. திருச்சி : சூரியூர் ஜல்லிக்கட்டில், காளை முட்டி உரிமையாளர் பலி
திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டில், காளை முட்டி உரிமையாளர் பலியாகியுள்ளார்.
4. உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
5. பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள், 300 வீரர்கள் களம் காணுகின்றனர்...!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.