கிரிக்கெட்

களத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தான் தெரியும்..! வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது - விராட் கோலி + "||" + We only know what's going on in the field ..! Outsiders do not know - Virat Kohli

களத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தான் தெரியும்..! வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது - விராட் கோலி

களத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தான் தெரியும்..! வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது - விராட் கோலி
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் வசப்படுத்தியது

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்தது.இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் வசப்படுத்தியது. 

முன்னதாக இந்தப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர்  அஸ்வின் வீசிய பந்தில் எல்.பி. டபிள்யூ ஆனார். நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ் முறையில் எல்கர் மேல் முறையீடு செய்தார். 

இதை டிவி ஸ்க்ரீனில் பார்த்த நடுவர்கள் பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்லும் என்று கூறி அவுட் வழங்கியதை ரத்து செய்தனர். ஆனால், எல்கர்  பேடில்  வாங்கியது தெளிவாகத் தெரிந்தது, அவுட் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், டிஆர்எஸ் முறையில் ரத்தானது இந்திய வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் கே.எல் ராகுல், மூத்த வீரர் அஸ்வின் ஆகியோர்  ஸ்டெம்பில் உள்ள மைக் அருகே சென்று பேசியது தெளிவாக பதிவாகியது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள கேப்டன் கோலி கூறியதாவது ;

களத்தில் என்ன நடந்தது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம், வெளியில் இருப்பவர்களுக்கு மைதானத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய சரியான விவரங்கள் தெரியாது  .நாங்கள் ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தால்,அதுவே ஆட்டத்தை மாற்றிய தருணமாக இருந்திருக்கும்.  அது ஆட்டத்தின் ஒரு தருணம். அதனை நாங்கள் கடந்து வந்துவிட்டோம். .  

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகல் : விராட் கோலிக்கு நோட்டீஸ் : கங்குலி மறுப்பு..!
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் விராட் கோலி அறிவித்தார்.
2. ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார்.
3. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
4. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்: விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது.
5. சுற்றி பல சம்பவங்கள் அரங்கேறிய போது கோலி அசத்தலாக செயல்படுகிறார் - ராகுல் டிராவிட்
சுற்றி பல சம்பவங்கள் அரங்கேறிய போதும் கடந்த 20 நாட்களாக கோலி அசத்தலாக செயல்பட்டு வருகிறார் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.