மாநில செய்திகள்

அரசு பணி வழங்க வேண்டும்: ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த பிரபாகரன் பேட்டி + "||" + Government Job should be provide -Prabhakaran Jallikattu

அரசு பணி வழங்க வேண்டும்: ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த பிரபாகரன் பேட்டி

அரசு பணி வழங்க வேண்டும்: ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த பிரபாகரன் பேட்டி
ஜல்லிக்கட்டில் வென்ற மாடு பிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று முதல் இடம் பிடித்த பிரபாகரன் கூறினார்.
மதுரை,

மதுரை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டில் மொத்தம் 700 காளைகள் பங்கேற்றன. 300 மாடு பிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 5 மணியளவில் நிறைவு அடைந்தது. 

பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிரபாகரன் என்ற இளைஞர் பிடித்தார்.  மதுரை மாவட்டம் பெதும்பை பகுதியை சேர்ந்த பிரபாகரன் ஓட்டுநர் ஆவார். முதல் இடம் பிடித்ததற்காக இவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது. பிரபாகரன் ஏற்கனவே கடந்த 2020,2021- ஆம் ஆண்டும் ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்து உள்ளார். 

3-வது முறையாக பாலமேடு  ஜல்லிக்கட்டில் முதல் இடம் பிடித்த  பிரபாகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், “ ஜல்லிக்கட்டில் வென்ற மாடு பிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜல்லிக்கட்டு தடையை நீக்க உதவிய நடுகல்
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஜல்லிக்கட்டு போட்டி.
2. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ந் தேதி நடக்கிறது
முழுஊரடங்கு காரணமாக 16-ந் தேதி நடக்க இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மறுநாள் 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார்.
3. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
4. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா?
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசின் முடிவுக்காக மாவட்ட நிர்வாகம் காத்திருக்கிறது.
5. அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ஜல்லிக்கட்டு
அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.