தேசிய செய்திகள்

5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த ஜனவரி 22-ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு + "||" + Ban On Political Rallies Amid Pandemic Extended Till January 22

5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த ஜனவரி 22-ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு

5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த  ஜனவரி 22-ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு
அதிகபட்சமாக 300 நபர்கள் அல்லது 50% இருக்கையுடன் உள் அரங்குகளில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. 

வரும் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை தேர்தல் நடைபெற உள்ளது. கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாகவும் தேர்தல் நடை பெறுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

ஜனவரி 15 ஆம் தேதி பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், 5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடையை   ஜனவரி 22ஆம் தேதி வரை  தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. 

மேலும், அதிகபட்சமாக 300 நபர்கள் அல்லது 50% இருக்கையுடன் உள் அரங்குகளில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று பரவல் குறையாததால் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜனவரி 15 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை
நாட்டில் கொரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
2. 5- மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு- அரசியல் கட்சிகள் சொல்வது என்ன?
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம்; தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
4. உள்ளாட்சி 2-ஆம் கட்ட தேர்தல்: 73.27 சதவீத வாக்குப்பதிவு
உள்ளாட்சி 2 ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
5. தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் போது அல்லது அதற்குப் பிறகு வெற்றி கொண்டாட்டமோ,ஊர்வலமோ நடைபெறக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.