மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த3 குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி + "||" + 3 children from the same family drowned in a puddle

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த3 குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த3 குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் குட்டை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்

வாணாபுரம்:

திருவண்ணாமலை மாவட்டம் சு.கம்பம்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மாபூஸ்கான் (வயது34) தில்ஷாத் (வயது 30 ) இவர்களுக்கு நஸ்ரின் (வயது 15) நசீமா (வயது 15) ஷாகிரா (வயது12) ஷபரின் வயது10) பரிதா (வயது 8) 5 குழந்தைகள் உள்ளனர். 

மாபூஸ்கான்  10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள  குட்டையில் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கழுவுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியிலுள்ள தண்ணீரில் மூழ்கி நஸ்ரின், நசீமா.ஷாகிரா மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இதில் நஸ்ரின், நசீமா சு.வாழவெட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும்   ஷாகிரா வெறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இதுகுறித்து வெறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் குழந்தைகள் மூழ்கி உயிரிழந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. உதவியாளரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
2. 28 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தமிழகத்தில் 905 குழந்தைகள் பாதிப்பு
தமிழகத்தில் நேற்று 905 குழந்தைகள் உட்பட 28 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. புத்தாண்டு அன்று பிறந்த 32 குழந்தைகள்
திருச்சி அரசு மருத்துவமனையில் புத்தாண்டு அன்று 32 குழந்தைகள் பிறந்தன.
4. டெல்லியில் மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்கள் உயிரிழப்பு
டெல்லியில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
5. திருச்சியில் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து; 12 பேர் காயம்
திருச்சியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.