மாநில செய்திகள்

டிஜிட்டல் மயம் என்ற பெயரில் வானொலி சேவைகளை நிறுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் + "||" + Stop radio services in the name of digital religion?

டிஜிட்டல் மயம் என்ற பெயரில் வானொலி சேவைகளை நிறுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

டிஜிட்டல் மயம் என்ற பெயரில் வானொலி சேவைகளை நிறுத்துவதா?  அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சென்னை ‘பி’ அலைவரிசை நிறுத்தப்படுவதற்காக வானொலி நிர்வாகத்தால் கூறப்படும் காரணங்கள் சரியல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை, 

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இருந்து 1017 கிலோ ஹெர்ட்ஸ் மத்திய அலையில் ஒலிபரப்பாகி வந்த சென்னை வானொலி நிலையத்தின் ‘பி’ அலைவரிசை சேவை நேற்றுடன் நிறுத்தப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. 

9 மணி நேர சேவை நிறுத்தப்பட்டது நேயர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இந்த ‘பி’ அலைவரிசை 1979 முதல் 32 ஆண்டுகளாக தமிழில் தனித்துவமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தது. இதனால் நேயர்கள் இனி விரும்பிய நிகழ்ச்சிகளை கேட்டு அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைவர்.

சென்னை வானொலியின் ‘பி’ அலைவரிசை சென்றடைந்த குக்கிராமங்களையும், தொலைதூரப்பகுதிகளையும் முதன்மை அலைவரிசையால் சென்றடைய முடியாது. சென்னை ‘பி’ அலைவரிசை நிறுத்தப்படுவதால் இனி சென்னை வானொலியில் முதன்மை அலைவரிசை, வர்த்தக ஒலிபரப்பு, பண்பலை ஆகிய 3 அலைவரிசைகள் மட்டுமே ஒலிபரப்பாகும். அதனால் இந்த சேவையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கானோர் வேலையிழப்பார்கள்.

சென்னை ‘பி’ அலைவரிசை நிறுத்தப்படுவதற்காக வானொலி நிர்வாகத்தால் கூறப்படும் காரணங்கள் சரியல்ல. டிஜிட்டல் மயம் என்ற பெயரில் வானொலி சேவைகளை நிறுத்துவது பெரும் தவறு. நிறுத்தப்பட்ட அலைவரிசைகளை மீண்டும் தொடங்க மத்திய அரசு ஆணையிட வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மீனவர்கள் மீதான அத்துமீறலை இலங்கை கைவிட மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்
மீனவர்கள் மீதான அத்துமீறலை இலங்கை கைவிட மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
2. தமிழகத்தில் கொரோனா ஆய்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா ஆய்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
3. ‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடைசெய்ய தாமதம் கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மேலும் ஒரு இளைஞர் தற்கொலை: ‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடைசெய்ய தாமதம் கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
4. தமிழகத்துக்கு புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தேவையில்லை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஏல பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் தமிழகத்துக்கு புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தேவையில்லை மத்திய அரசுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
5. தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.