இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,
இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 84,429 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,05,410 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 075 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரத்து 602 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 36,55,733 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு மிகவும் கடுமையாக பரவி வருகிறது. இங்கு கண்டறியப்படும் கொரோனா பாதிப்பு அடைந்தோரில் 93.4% பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தவிர 5.6% பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று (21-ந் தேதி) இந்தியா வருகிறார். புறப்படுவதற்கு முன், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ‘இரு தரப்பு உறவுகள் வலுவடையும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.