மாநில செய்திகள்

குறும்படம் எடுக்க பணம் இல்லை: ரூ.30 லட்சம் கேட்டு தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய வாலிபர் + "||" + The kidnapper pretended to ask his father for Rs 30 lakh as he needed money to make a short film

குறும்படம் எடுக்க பணம் இல்லை: ரூ.30 லட்சம் கேட்டு தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய வாலிபர்

குறும்படம் எடுக்க பணம் இல்லை: ரூ.30 லட்சம் கேட்டு தந்தையிடம் கடத்தல் நாடகமாடிய வாலிபர்
குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதால் தந்தையிடம் ரூ.30 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய வாலிபரை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பூந்தமல்லி,

சென்னை திருவல்லிக்கேணி, ராம் நகரில் வசித்து வருபவர் பென்சிலையா (வயது 54). இவருடைய மகன் கிருஷ்ணபிரசாத் (24). கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், அதன்பிறகு வீடு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் மகனை காணாததால் அதிர்ச்சி அடைந்த பென்சிலையா, தனது மகன் மாயமானதாக வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.


அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கிருஷ்ணபிரசாத்தை தேடி வந்தனர். இதற்கிடையில் பென்சிலையாவின் செல்போனுக்கு கிருஷ்ணபிரசாத் செல்போன் எண்ணில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

ரூ.30 லட்சம்

அதில், “உங்கள் மகன் கிருஷ்ணபிரசாத்தை கடத்தி வைத்து உள்ளோம். ரூ.30 லட்சத்தை கொடுத்தால் அவரை ஒப்படைக்கிறோம்” என இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பென்சிலையா, இதுபற்றி வடபழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

வடபழனி போலீசார், கிருஷ்ணபிரசாத்தின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தனர். அதில் அவர், தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கிருஷ்ணபிரசாத்தை பத்திரமாக மீட்டு சென்னை அழைத்து வந்தனர்.

குறும்படம் எடுக்க ஆசை

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கிருஷ்ணபிரசாத் கடத்தப்படவில்லை. அவரே கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. கிருஷ்ணபிரசாத்துக்கு சரியான வேலை இல்லாமல் இருந்து வந்தார். மேலும் அவருக்கு குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

ஆனால் அதற்கு பணம் தேவைப்பட்டதால் தனது தந்தையிடமே பணத்தை அபகரிக்க முடிவு செய்த அவர், தனது செல்போனில் இருந்து அவரே, “உங்கள் மகனை கடத்தி விட்டோம். ரூ.30 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம்” என கடத்தல்காரர்கள் மிரட்டுவதுபோல் குறுந்தகவல் அனுப்பி நாடகமாடியது அம்பலமானது. கிருஷ்ணபிரசாத்தை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர்: மின்சார ரெயிலில் இருந்த தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு...!
திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்து உள்ளார்.
2. வாணியம்பாடி அருகே சாலையோரம் நின்ற லாரி திருட்டு - போலீசார் விசாரணை...!
வாணியம்பாடி அருகே சாலையோரம் நின்ற லாரியை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. சினிமா பாணியில் வயிற்றுக்குள் மறைத்து ரூ.6½ கோடி ஹெராயின் கடத்திய உகாண்டா வாலிபர்
சினிமா பாணியில் வயிற்றுக்குள் மறைத்து ரூ.6½ கோடி ஹெராயின் போதை மாத்திரைகளை கடத்திய உகாண்டா வாலிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
4. மணல் கடத்தல்; 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. தினசரி ரூ.2 ஆயிரம் சம்பளம் - பிச்சையெடுக்க அழைக்கும் வாலிபர்...!
வெள்ளகோவில் அருகே தினசரி ரூ.2 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்று கடைக்காரரை வாலிபர் பிச்சையெடுக்க அழைத்து உள்ளார்.