மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம் + "||" + Review meeting of the State Planning Commission today under the chairmanship of MK Stalin
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. சென்னை எழிலகத்தில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும்,டிஆர்பி ராஜா,டாபே மல்லிகா சீனிவாசன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.
சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்கவும், தமிழை வழக்காடு மொழியாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.