தேசிய செய்திகள்

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் + "||" + Prime Minister Modi tops list of world famous leaders

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
புது டெல்லி,

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை 'தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். 

தி மார்னிங் போஸ்ட் தகவலின் படி, உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர் மோடிக்கு 71 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 66 சதவிகித பேர் ஆதரவுடன் 2-வது இடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதில் 43 சதவிகிதம் ஆதரவு பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவிகிதம் ஆதரவை பெற்று 13-வது இடத்தில் உள்ளார். 

தி மார்னிங் கன்சல்ட் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் மோடிக்கு 84 சதவிகிதம் ஆதரவு கிடைத்தது. அதேபோன்று கடந்த ஆண்டு மே மாதத்தில் 63 சதவிகிதமாக சரிந்து, தற்போது 71 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

ஜனவரி 13-ஆம் தேதி முதல் 18 ம் தேதி வரையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புத்தர் பிறந்த இடத்தில் தரிசனம்: இன்று நேபாளம் செல்லும் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று நேபாளத்துக்கு செல்கிறார். புத்தர் பிறந்த இடத்தில் தரிசனம் செய்கிறார். அவர் முன்னிலையில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
2. “நலத்திட்டங்கள் 100 சதவீத பயனாளிகளை எட்ட வேண்டும் என்பதே எனது கனவு” - பிரதமர் மோடி
மூத்த எதிர்கட்சி தலைவர் தன்னிடம் கேட்ட கேள்வி குறித்த சுவாரஸ்ய தகவலை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.
3. தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது குறித்து மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
4. உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்'- பிரதமர் மோடி- மேக்ரான் கூட்டறிக்கை
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போர் குறித்து இந்தியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.
5. அட்சய திருதியை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது ஐதீகம்.