தேசிய செய்திகள்

கேரளாவில் 41 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று பாதிப்பு + "||" + Corona infection cases in Kerala exceeds 41 thousand

கேரளாவில் 41 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று பாதிப்பு

கேரளாவில் 41 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் தற்போது 2.23 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 41,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏற்கனவே உயிரிழந்து இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 73 உயிரிழப்புகள் தற்போது மறு கணக்கீட்டின் படி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 51,607 2 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 17,053 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52,76,647 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது 2,23,548 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பழைய பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்ற திட்டம்: கேரளா புது முயற்சி
கேரளாவில் , அரசு போக்குவரத்து கழகத்தின் பழைய தாழ்தள பஸ்களை,வகுப்பறைகளாகவும், புத்தகசாலையாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
2. கேரளாவில் கனமழை ; 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கேரளாவில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
3. உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.36 கோடி ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது.
4. கொரோனாவால் மிரளும் வட கொரியா...தென் கொரியா உதவ முன்வந்தும் ஏற்க மறுப்பு
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியா போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையில் தள்ளாடி வருகிறது.
5. டெல்லியில் சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 393 பேருக்கு தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.