உலக செய்திகள்

சீனாவில் புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed in 73 persons in China

சீனாவில் புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் தற்போது 3,173 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பீஜிங்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 50 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 23 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். சீனாவில் தற்போது 3,173 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,05,484 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.36 கோடி ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது.
2. கொரோனாவால் மிரளும் வட கொரியா...தென் கொரியா உதவ முன்வந்தும் ஏற்க மறுப்பு
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியா போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையில் தள்ளாடி வருகிறது.
3. டெல்லியில் சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 393 பேருக்கு தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் புதிதாக 377 பேருக்கு கொரோனா; மேலும் 910 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. வடகொரியாவில் மேலும் 15 பேர் கொரோனாவால் பலி: தென்கொரியாவின் தடுப்பூசி உதவியை ஏற்குமா?
வட கொரியாவில் மேலும் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தென்கொரியாவின் தடுப்பூசி உதவிகளை வடகொரியா ஏற்று பேரழிவை தடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.