மாவட்ட செய்திகள்

அரியலூர்: குழந்தை பெற்றெடுத்த 3 நாளில் பெண் உயிரிழப்பு... உறவினர்கள் போராட்டம் + "||" + Women Giving Birth To a Child Died 3 Days After Delivery in Ariyalur

அரியலூர்: குழந்தை பெற்றெடுத்த 3 நாளில் பெண் உயிரிழப்பு... உறவினர்கள் போராட்டம்

அரியலூர்: குழந்தை பெற்றெடுத்த 3 நாளில் பெண் உயிரிழப்பு... உறவினர்கள் போராட்டம்
குழந்தை பெற்றெடுத்த 3 நாட்களில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே திருக்களப்பூர், முத்து விநாயகர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ராஜா (39). இவர் சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

ராஜாவுக்கு சுதா (31) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு 5 வயதில் ரித்தீஷ் என்ற ஒரு மகனும் உள்ளார். இதனிடையே, சுதா இரண்டாவதாக கருவுற்றிருந்தார். 

அவர் 2-வது பிரசவத்திற்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 19-தேதி அனுமதிக்கப்பட்டார். சுதாவிற்கு 20-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. மேலும், குழந்த பெற்றெடுத்த அன்றே கணவர் ராஜாவின் அனுமதியுடன் சுதாவிற்கு கருத்தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், தாயும் குழந்தையும் நலமாக இருந்த நிலையில் சுதாவிற்கு நேற்று திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், டாக்டரை அழைத்துள்ளனர்.

ஆனால், மருத்துவமனை டாக்டரான உஷா சொந்த வேலையாக நேற்று முன் தினம் இரவே வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், பிற டாக்டர்களும், நர்சும் மயக்கம் அடைந்த சுதா சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த சுதாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுதாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனை தரப்பில் உரிய காரணம் தெரிவிக்கவில்லை என்றால் சுதாவின் உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் போராடினர்.

சுதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், டாக்டர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் உயிரிழந்த சுதாவின் உடலை பெற்று அடக்கம் செய்ய சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

குழந்தை பெற்றெடுத்த 3 நாட்களில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர் அருகே பயங்கரம்: அண்ணியிடம் தகராறு செய்த வாலிபர் உலக்கையால் அடித்து கொலை
கீழப்பழுவூர் அருகே அண்ணியிடம் தகராறு செய்த வாலிபரை உலக்கையால் அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
2. தீரன் படப்பாணியில் சைபர் திருடர்களை தூக்கிய தமிழக போலீசார்..!
செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாக கூறி 23 லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்து வரும் அரிய பொருட்கள்..!
அரியலூர் அருகே மாளிகைமேட்டில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் அகழ்வாராய்ச்சி பணியில் சில அரிய பொருட்கள் கிடைத்து வருகிறது.
4. அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்
5. 18 வார்டுகளை கொண்ட அரியலூர் நகராட்சி யாருக்கு? கடும் இழுபறி ..
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது .