தேசிய செய்திகள்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பு: 70 ஆண்டு கால சீருடையை அணிந்து பங்கேற்கிறது ராணுவம்! + "||" + The Indian Army, at this year’s Republic Day parade, will showcase how uniform and rifles have evolved since 1950s.

டெல்லி குடியரசு தின அணிவகுப்பு: 70 ஆண்டு கால சீருடையை அணிந்து பங்கேற்கிறது ராணுவம்!

டெல்லி குடியரசு தின அணிவகுப்பு: 70 ஆண்டு கால சீருடையை அணிந்து பங்கேற்கிறது ராணுவம்!
ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்கள் இத்தனை ஆண்டு காலத்தில் சீருடை, துப்பாக்கி ஆகியவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை காட்சிப்படுத்த உள்ளன.
புதுடெல்லி, 

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில், மொத்தம் 14 குழுக்கள் பங்கேற்கின்றன. இவை ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்களும், கடற்படை, விமானப்படை. ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு குழுவும், துணை ராணுவப்படைகளை சேர்ந்த 4 குழுக்களும், தேசிய மாணவர் படையை சேர்ந்த 2 குழுக்களும் ஆகும்.

ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்கள் இத்தனை ஆண்டு காலத்தில் சீருடை, துப்பாக்கி ஆகியவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை காட்சிப்படுத்த உள்ளன. கொரோனா காலம் என்பதால், ஒவ்வொரு குழுவிலும் 144 பேருக்கு பதிலாக 96 பேர் மட்டும் இடம் பெறுகிறார்கள்.

ராஜ்புத் ரெஜிமெண்ட்டை சேர்ந்த முதல் குழு, 1950-களில் இருந்த ராணுவ சீருடையை அணிந்து, .303 துப்பாக்கியுடன் பங்கேற்கிறது. அசாம் ரெஜிமெண்டை சேர்ந்த 2-வது குழு, 1960-களில் இருந்த சீருடை அணிந்து, .303 துப்பாக்கியுடன் பங்கேற்கிறது.

ஜம்மு காஷ்மீர் காலாட்படையை சேர்ந்த 4-வது குழு, 1970-களின் சீருடை அணிந்து, 7.66 எம்.எம். ரக துப்பாக்கியுடன் பங்கேற்கிறது. 4 மற்றும் 5-வது குழுக்கள், தற்போதைய ராணுவ சீருடை அணிந்து பங்கேற்கின்றன.

பாராசூட் ரெஜிமெண்டை சேர்ந்த 6-வது குழு, இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ராணுவ சீருடையை அணிந்து பங்கேற்கிறது. டவோர் ரக துப்பாக்கியையும் பயன்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுடெல்லி: புல்டோசர்கள் கொண்டு சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!
புதுடெல்லியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
2. உணவு விவகாரம்: ஜேஎன்யு பல்கலைக்கழக மோதல் குறித்து அறிக்கை கேட்ட மத்திய அரசு
இந்து மத பண்டிகையான ராம நவமியன்று ஜேஎன்யு பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
3. வீட்டிற்கு வெளியே நின்று சிகரெட் குடித்துக்கொண்டிருந்த சிறுவன் கழுத்தறுத்து கொலை
தனது வீட்டிற்கு வெளியே நின்று சிகரெட் குடித்துக்கொண்டிருந்த சிறுவனை கழுத்தறுத்து கொன்ற மற்றொரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. 2022 ஆசிய கோப்பை இலங்கையில் நடத்த முடிவு!
2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் டி20 முறையில் நடைபெறும்.
5. இந்த ஆண்டாவது அதிர்ஷ்டம் அடிக்குமா? புதிய ஜெர்சியை வெளியிட்ட பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2022 சீசனில் அணியும் புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது.