உலக செய்திகள்

அமெரிக்கா: இரவு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி + "||" + 4 killed, 1 wounded in 'targeted ambush' shooting at house party near LA

அமெரிக்கா: இரவு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி

அமெரிக்கா: இரவு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி
அமெரிக்காவில் இரவு விருந்து நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு விருந்து நடைபெற்றது. இதில் பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், அந்த இரவு விருந்து நடைபெற்ற வீட்டில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரவு விருந்து நடைபெற்ற வீட்டில் 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஒரு நபர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்த போலீசார் துப்பக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக அந்த வீட்டிற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு ரத்து - சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவு
சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
2. அமெரிக்கா: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? - பகீர் பின்னணி
அமெரிக்காவில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான சர்ச்சில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
3. "ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு" 69 வயதில் தந்தையாகும் ரஷிய அதிபர் புதின்...!
ரஷிய அதிபர் புதினின் 38 வயது ரகசிய காதலி அலினா கபேவா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
4. அமெரிக்காவில் சர்ச் ஒன்றில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி 4 பேர் காயம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
5. அமெரிக்காவில் பறக்கும் தட்டுக்கள் குறித்த வழக்கு - மே17-ந் தேதி விசாரணை
அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை மே 17-ந் தேதி மேற்கொள்ள உள்ளது.