தேசிய செய்திகள்

பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து - பாஜக எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 மாணவர்கள் பலி + "||" + 7 Medical Students' Death In Maharashtra Accident

பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து - பாஜக எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 மாணவர்கள் பலி

பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து - பாஜக எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 மாணவர்கள் பலி
பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பாஜக எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.
மும்பை,

மராட்டிய மாநிலம் திரோரா தொகுதி பாஜக எம்.எல்.ஏ. விஜய் ரஹாங்டேல். இவரின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல்.

அவிஷ்கர் வார்தாவில் உள்ள சவாங்கி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், அவிஷ்கர் தனது நண்பர்கள் 6 பேருடன் நேற்று இரவு 12 மணியளவில் காரில் வார்தாவிற்கு சென்றுகொண்டிருந்தார். செல்சுரா என்ற பகுதியில் உள்ள பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புகளில் இடித்துக்கொண்டு 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலியின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேலி மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் என மொத்தம் 7 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.   

மாணவர்களின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் - பெண் எம்.பி. அதிரடி பேச்சு
பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் என்று பெண் எம்.பி. தெரிவித்துள்ளார்.
2. மராட்டியம்: பயங்கர ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்திய 5 பேர் கைது
மராட்டியத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மக்களை மிரட்டி வந்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
3. மராட்டியம்: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்
மராட்டியத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்தனர்.
4. மண்டபத்திற்கு 5 மணி நேரம் தாமதம்: மணமகனின் நடன மோகத்தால் நின்ற திருமணம்..!!
மணமகன் தாமதமாக வந்ததால், ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் மராட்டியத்தில் நடந்து உள்ளது.
5. தொற்று அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்: மராட்டிய சுகாதார மந்திரி
தொற்று அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று மராட்டிய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.