மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் பரபரப்பு...! + "||" + Former TN CM MGR Statue Damaged in Thanjavur

தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் பரபரப்பு...!

தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் பரபரப்பு...!
தஞ்சாவூரில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை,

தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் சிலையை தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் எம்.ஜி.ஆர். சிலை பெயர்த்து பீடம் பின்புறம் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து சிலையை மீட்டு மீண்டும் பீடத்தில் வைத்தனர். இதுகுறித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என விசாரணை நடத்திவந்தனர். பின்னர் அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தியதில் வடக்குவாசலை சேர்நத சேகர் என்பவர்தான் சிலையை  உடைந்தது என்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

மேலும் இது தொடர்பாக சேகரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடி போதையில் சிலையை உடைத்தது தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கணவன் இறந்த துக்கம்: மகன்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் - 2 மகன்களும் பரிதாப பலி..!
தஞ்சை அருகே தனது இரண்டு மகன்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றதில் இரண்டு மகன்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தாய் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
2. நெடுஞ்சாலையில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சிய டிராக்டர் மீது மோதிய அரசு பஸ் - 15 பேர் படுகாயம்
தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. தஞ்சை விபத்து: அதிமுக, பாஜக, திமுகவினர் அனைவரும் இணைந்து பணியாற்றினர் - அன்பில் மகேஷ் உருக்கம்
தஞ்சை களிமேடு விபத்தின்போது அதிமுக, பாஜக, திமுகவினர் என அனைவரும் இணைந்து பணியாற்றினர் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
4. தஞ்சை தேர் விபத்து: ‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோக சம்பவம்’ - பிரதமர், ஜனாதிபதி இரங்கல்
தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
5. தேர் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சை செல்கிறார்...!
தஞ்சை களிமேடு பகுதியில் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.