மாநில செய்திகள்

உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற காவலர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம்..!! + "||" + Anna Medal for Policeman Rajeshwari who carried a life-saver on his shoulder.

உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற காவலர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம்..!!

உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற காவலர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம்..!!
குடியரசு தினவிழாவில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருது மற்றும் காசோலை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
சென்னை,

வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சிறந்த விவசாயிகளுக்கான விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.

2022ஆம் ஆண்டுக்கான வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம் 8 பேருக்கு வழங்கப்பட்டது.

உயிருக்கு போராடியவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இதேபோன்று திருவொற்றியூரில் கட்டட விபத்தின்போது அச்சமின்றி காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட தனியரசுக்கு விருது வழங்கப்பட்டது.

கோவை வனக்காவல்நடை உதவி மருத்துவர் அசோகன், மதுரை அருகே கார் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய கார் ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக காவலர்கள் 5 பேருக்கு காந்தியடிகள் விருதினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சக்தி, முசிறி எஸ்.ஐ. சிதம்பரம் உள்ளிட்டோருக்கு காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது.