மாநில செய்திகள்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு + "||" + Announcement of the Tamil Development Awards by the Government of Tamil Nadu

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு
.2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, 

தமிழ்ச் சமுதாய உயர்வுக்கு, பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


*பேரறிஞர் அண்ணா விருது -நாஞ்சில் சம்பத்

*சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர், 

*சிங்கார வேலர் விருது - கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்

*மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது

*நெல்லை கண்ணன்-  இளங்கோவடிகள் விருது 

*பாரதி பாஸ்கர் - கம்பர் விருது 

*மகாகவி பாரதியார் விருது -பாரதி கிருஷ்ணகுமார்

*பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமன்

*வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயர்

*தேவநேயப்பாவாணர் விருது -முனைவர் கு. அரசேந்திரன்

 *உமறுப்புலவர் விருது - நா. மம்மது

*கி.ஆ.பெ. விருது -முனைவர் ம. இராசேந்திரன்

*ஜி.யு.போப் விருது- ஏ.எஸ். பன்னீர்செல்வம், 

*மறைமலையடிகள் விருது -சுகி.சிவம், 

*அயோத்திதாசப் பண்டிதர் விருது -ஞான. அலாய்சியஸ் 

சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கப்படுகிறது

இந்தாண்டு முதல் விருதுத்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.