மாநில செய்திகள்

சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது- உயிர்மை திங்களிதழுக்கு வழங்கப்படுகிறது + "||" + Chief Minister MK Stalin announced the Tamil Development Awards of the Government of Tamil Nadu

சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது- உயிர்மை திங்களிதழுக்கு வழங்கப்படுகிறது

சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது- உயிர்மை திங்களிதழுக்கு வழங்கப்படுகிறது
2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
சென்னை,

2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
  • சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கப்படுகிறது
  • தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன், 
  • உமறுப்புலவர் விருது - நா. மம்மது, 
  • கி.ஆ.பெ. விருது - முனைவர் ம. இராசேந்திரன்.
  • கம்பர் விருது - பாரதி பாஸ்கர், 
  • ஜி.யு.போப் விருது - ஏ.எஸ். பன்னீர்செல்வம்,
  • மறைமலையடிகள் விருது - சுகி.சிவம், 
  • இளங்கோவடிகள் விருது - நெல்லை கண்ணன், 
  • அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான. அலாய்சியஸ்
இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர்.