தேசிய செய்திகள்

வாகா எல்லையில் வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்...! + "||" + Beating Retreat ceremony at the Attari-Wagah border near Amritsar, Punjab on #RepublicDay

வாகா எல்லையில் வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்...!

வாகா எல்லையில் வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்...!
வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாகா,

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று தலைநகர் டெல்லியில் 73வது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள சர்வதேச வாகா எல்லை பகுதியில் குடியரசு தின கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சர்வதேச அட்டரி வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு நாட்டு வீரர்களும் அவரவர் நாட்டு கொடியை இறக்கி  சென்றனர். இருநாடுகளின் கொடிகளும் பாரம்பரிய முறைப்படி இறக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீறுநடை போட்டுச்சென்றனர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வாகா எல்லையில் குடியரசு தின கொண்டாட்டம் - இனிப்பு பரிமாற்றிக் கொண்ட இருநாட்டு வீரர்கள்...!
வாகா எல்லையில் குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இருநாட்டு வீரர்கள் இனிப்பு பரிமாற்றிக் கொண்டனர்.