மாநில செய்திகள்

பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- மாநில தேர்தல் ஆணையர் + "||" + TN urban local polls: Feb 19

பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- மாநில தேர்தல் ஆணையர்

பிப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- மாநில தேர்தல் ஆணையர்
21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை என சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்ட நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்  தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு;

 தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர், 8,288 பேரூராட்சி உறுப்பினர், 3,468 நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி  தேர்தல் நடைபெறும் 

வாக்குப்பதிவு காலை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் கொரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்கலாம் 

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ம் தேதி தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மனுதாக்கலுக்கான கடைசி பிப்ரவரி 4-ம் தேதி என்றும் கூறப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை பரிசீலனை பிப்ரவரி 5ம் தேதி அன்றும், வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 7-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடக்கவுள்ளது. அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் 

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மார்ச் 2ம் தேதி பதவியேற்பார். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தற்போது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு- பசவராஜ் பொம்மை
உள்ளாட்சி தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் தேர்வு- ஆர்ப்பாட்டம் நடந்ததால் பரபரப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டதால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. அம்மாபேட்டை பேரூராட்சியில் ஓட்டு போட தாமதமாக வந்த 5 கவுன்சிலர்கள் வெளியேற்றம்- ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டையில் போட்டி தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி
அம்மாபேட்டை பேரூராட்சியில் ஓட்டுப்போட தாமதமாக வந்த 5 கவுன்சிலர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் போட்டி தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.
4. ஈரோடு மாவட்டத்தில் வெற்றி பெற்ற 4 நகராட்சி தலைவர்கள்
ஈரோடு மாவட்டத்தில் வெற்றி பெற்ற 4 நகராட்சி தலைவர்கள் விவரம் வருமாறு:-
5. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள்; 4-ந் தேதி மறைமுக தேர்தல் நடக்கிறது
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள்.