அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் 2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு + "||" + Rising corona: 2,356 streets in Tamil Nadu declared restricted areas
அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் 2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் காரணமாக தமிழகத்தில் 2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 2,356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,868 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. செங்கல்பட்டில் 121, தஞ்சாவூரில் 62 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் 23 பகுதிகளும், கோவையில் 21 பகுதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, கரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், விழுப்புரம், மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.