மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..? + "||" + Opportunity to open first schools in Tamil Nadu from February 1 ..?

தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..?

தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..?
தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1-12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

தற்போது, தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளன. இந்த நிலையில், தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் இன்று மருத்துவ நிபுணர்கள், குழுவுடன்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

முதற்கட்டமாக 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட நிலையில், தற்போது 1 முதல் 12 வரை பள்ளிகளை திறப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சிலமணி நேரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்லூரிகளை பொறுத்தவரை பிப்ரவரி 1 முதல் 20-ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருப்பதால், தேர்வுகள் முடிந்த பிறகு நேரடி வகுப்புகள் நடைபெறுவதற்கும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி, கோவைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
2. தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு..!
கர்நாடகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக திறக்கப்படாமல் இருந்தது.
4. தமிழகத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.