ஓமைக்ரான் தோன்றிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நுழைவதற்கான தடை நீக்கம்- ஐக்கிய அமீரகம் + "||" + UAE to lift ban on entry from African countries where Omicron originated from Jan 29
ஓமைக்ரான் தோன்றிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நுழைவதற்கான தடை நீக்கம்- ஐக்கிய அமீரகம்
ஓமைக்ரான் தோன்றிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான தடை நீக்கப்படுவதாக ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது.
துபாய்,
ஐக்கிய அமீரகத்தின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், ஓமைக்ரான் தோன்றிய 12 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நவம்பர் 2021 இல் விதிக்கப்பட்ட நுழைவுக் கட்டுப்பாடுகளை ஜனவரி 29-ம் தேதி முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மேலாண்மை ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில்
"ஜனவரி 29 முதல், கென்யா, தான்சானியா, எத்தியோப்பியா, நைஜீரியா, காங்கோ குடியரசு, தென்னாப்பிரிக்கா குடியரசு, போட்ஸ்வானா, ஈஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைய மீண்டும் அனுமதிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் வசிப்பவர்கள் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும். இந்த நாடுகளில் இருந்து நுழைவதற்கான நிபந்தனைகளில் ஐக்கிய அமீரகம் வந்தவுடன் மற்றொரு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும் மற்றும் வருகைக்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக கோவிட்க்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.