மாநில செய்திகள்

கடலூர்: பழைய கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி + "||" + Cuddalore: Two students were killed when an old building collapsed

கடலூர்: பழைய கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

கடலூர்: பழைய கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்கள்  2 பேர் பலி
கடலூர் அருகே பழைய கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்
கடலூர்

கடலூர் அருகே எஸ். புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் பழமைவாய்ந்த இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் கட்டிடம் மோசமடைந்து நிலையில் காணப்பட்டது. இன்று  இந்த வீடுகளுக்கு அருகில் எஸ்.புதூரை சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வீரசேகர், சுதீஸ்குமார் புவனேஸ்வரன் மற்றும் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிடம் இடிந்து விழுந்தது. 

இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வீரசேகர், சுதீஷ்குமார் 2 பேரும் உயிரிழந்தனர். 

வனேஸ்வரனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. கடலூரில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
கடலூரில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
2. 70 மீட்டர் கம்பியில் கைகளால் தொங்கி 87 வினாடிகளில் கடந்து சிறுமி சாதனை
4 வயது சிறுமி அனுஸ்ரீ கிடைமட்ட கம்பியில் இரண்டு கைகளால் தொங்கிச் சென்று 87 வினாடிகளில் 70 மீட்டர் கடந்து சாதனை படைத்துள்ளார்.