மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் + "||" + 5 days moderate rain in Tamil Nadu - Meteorological Center

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழக கடலோர மாவட்டம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

29, 30-ந் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 31-ந் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானர்து முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி, கோவைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
2. தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
5. தமிழகத்தின் 10 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.