உலக செய்திகள்

தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் + "||" + Central govt alert TN Coast guard in the wake of

தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. இதனால், பதற்றம் நிலவுகிறது.  இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. 

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலால், அகதிகளுடன் தேச விரோத கும்பல்களும் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால்   தமிழக கடலோர பகுதிகளை உஷார் படுத்துமாறு மாநில காவல்துறைக்கு மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இலங்கையில் நேற்று பேருந்தில் சென்று கொண்டிருந்த கைதிகள் 58 பேர்  தப்பி  ஓடினர். இந்தக் கைதிகள் கடல் வழியாக இந்தியாவுக்கு ஊடுருவ வாய்ப்புள்ளதாலும், விடுதலைப்புலிகள், போதைப்பொருள் கும்பல்கள்  ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய  உள்துறை எச்சரிக்கையை  கடலோர பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்களை சுட்டுத்தள்ள ராணுவம் தயாராக உள்ளதா? இலங்கை ராணுவ தளபதி விளக்கம்
இலங்கையில் உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், காவல்துறை மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
2. மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு தப்பி ஓட்டமா? இந்திய தூதரகம் மறுப்பு
மகிந்த ராஜபக்சே உள்பட இலங்கையில் ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் இந்தியாவுக்கு தப்பி ஓடியதாக இலங்கையில் செய்திகள் பரவின.
3. இலங்கையில் ராணுவ ஆட்சி? - போராடும் மக்களுக்கு எச்சரிக்கை
பதற்றமான சூழல் நிலவுவதால் நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் அதிபர் எச்சரித்துள்ளார்.
4. லைவ் அப்டேட்ஸ்: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு
இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில் முப்படைகளுக்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5. இலங்கையில் மக்கள் கொந்தளிப்பு; வெளிநாட்டிற்கு தப்பிச்செல்கிறாரா ராஜபக்சே?
பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அலரி மாளிகையில் இருந்து ராஜபக்சே குடும்பத்துடன் வெளியேறினார்.