மாநில செய்திகள்

வேலூரில் பயங்கரம்: மது போதையில் கத்தியால் வெட்டிய கணவனை வெட்டிக் கொன்ற மனைவி..! + "||" + The wife who hacked her husband to death

வேலூரில் பயங்கரம்: மது போதையில் கத்தியால் வெட்டிய கணவனை வெட்டிக் கொன்ற மனைவி..!

வேலூரில் பயங்கரம்: மது போதையில் கத்தியால் வெட்டிய கணவனை வெட்டிக் கொன்ற மனைவி..!
வேலூர் அருகே கத்தியால் வெட்டிய கணவரிடமிருந்து கத்தியை பிடுங்கி வெட்டி கொன்ற மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர்:

வேலூர், வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 60) லாரி செட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி (48). வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் திருமணம் ஆகி சென்றுவிட்டார். மற்றொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் குமரவேல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு பொழுதை கழித்தார். தினமும் மது போதையில் வீட்டுக்கு வரும் அவர் கோமதியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் குமரவேல் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் கணவன் மனைவி சண்டை முற்றியது. இதில் ஆத்திரமடைந்த குமரவேல் கத்தியை எடுத்து கோமதியை வெட்டினார். அவரது முகம், நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. உயிர் தப்பி ஓடிய கோமதி கத்தியை பிடுங்கி கணவன் என்று பாராமல் குமரவேலை எதிர்த்து வெட்டி சாய்த்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குமரவேல் வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

வெட்டுக் காயத்தில் படுகாயமடைந்த கோமதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குமரவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோமதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரவேல் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்த நிலையில் கோமதி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றினார். மதுப்பழக்கத்தால் குமரவேல் தகராறில் ஈடுபட்டதால் அவர்களது குடும்பத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சையில் ஆடிட்டர் சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
தஞ்சை மாநகராட்சி கழிவறையை ஏலம் எடுப்பது தொடர்பான முன்விரோதத்தில் ஆடிட்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
2. வேலூர் ஷவர்மா விற்பனை கடைகளில் 4 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்..!
வேலூரில் உள்ள ஷவர்மா விற்பனை கடைகளில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 4 கிலோ கெட்டுபோன ஷவர்மா கண்டறியப்பட்டது.
3. வேலூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் 150 பேர் கைது
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. ரூ.1.60 லட்சம் மின் கட்டணம் - கூலித்தொழிலாளிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்
வேலூரில் கூலி தொழிலாளி வசிக்கும் வீட்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. வேலூர் மத்திய சிறையில் செல்போன் மற்றும் பேட்டரி பறிமுதல்
காவலர்கள் சோதனையின் போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.