உலக செய்திகள்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம் + "||" + Stopping petrol and diesel sales in Sri Lanka

இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்
இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு,

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் வெகுண்டெழுந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினர். இதையடுத்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள்  தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.  

மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்துள்ள கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனையை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெட்ரோல்,டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
2. பொதுமக்களை சுட்டுத்தள்ள ராணுவம் தயாராக உள்ளதா? இலங்கை ராணுவ தளபதி விளக்கம்
இலங்கையில் உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், காவல்துறை மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
3. மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு தப்பி ஓட்டமா? இந்திய தூதரகம் மறுப்பு
மகிந்த ராஜபக்சே உள்பட இலங்கையில் ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் இந்தியாவுக்கு தப்பி ஓடியதாக இலங்கையில் செய்திகள் பரவின.
4. இலங்கையில் ராணுவ ஆட்சி? - போராடும் மக்களுக்கு எச்சரிக்கை
பதற்றமான சூழல் நிலவுவதால் நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் அதிபர் எச்சரித்துள்ளார்.
5. லைவ் அப்டேட்ஸ்: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு
இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில் முப்படைகளுக்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.