தேசிய செய்திகள்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் யாருக்கு அதிகாரம்..? மத்திய மாநில அரசுகள் வாதம் + "||" + Who has the power in the matter of release of Perarivalan ..? Central Governments Argument

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் யாருக்கு அதிகாரம்..? மத்திய மாநில அரசுகள் வாதம்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் யாருக்கு அதிகாரம்..? மத்திய மாநில அரசுகள் வாதம்
பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதுஎன மத்திய அரசு வாதம் செய்து வருகிறது.
புதுடெல்லி, 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் சட்டசபையின் தீர்மானத்தை ஒருமனதாக முன்மொழிந்த அமைச்சரவையின் முடிவை அமல்படுத்தாமல் கவர்னர் தடுத்து வைத்திருப்பதுடன், இந்த விவகாரத்தை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்பு சாசனத்தை மீறிய செயலாகும். இதுபோன்ற அதிகாரத்தை கவர்னருக்கு அரசியலமைப்பு சாசனம் 161-வது பிரிவு அளிக்கவில்லை’ என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. 

தமிழக அமைச்சரவை ஒரு முடிவெடுத்து அதுபற்றி கவர்னர் முடிவெடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதா..? இல்லையா..? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம் என்று கூறி வழக்கினை இன்று நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கே எம் நட்ராஜ் ஆஜர் ஆகியுள்ளார்.

இந்த விவகாரத்தில் 2 அல்லது 3 ஆண்டுகள் கவர்னர் முடிவெடுக்கவில்லை.நாங்கள் முடிவெடுக்க முடிவுசெய்தபோது , ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் என கூறப்பட்டது. அமைச்சரவை முடிவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப அதிகாரம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதுஎன மத்திய அரசு வாதம் செய்து வருகிறது. 

தமிழக அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் முடிவை எடுத்து, அதுதொடர்பான தகவலை மத்திய அரசிடம் பகிர்ந்துகொண்டது. அதற்குப் பிறகுதான் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறி தலையிட்டது, அதன்பின்னரே அனைத்து குழப்பங்கள் தொடங்கின என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கவர்னர் எந்த விதிகளின் அடிப்படையில் கோப்புகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்? கவர்னருக்காக நீங்கள் ஏன் வாதாடுகிறீர்கள்? என பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

குற்றவாளிகளுக்கான கருணை அல்லது நிவாரணம் வழங்குவது தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசின் வரம்புக்குள் வருகிறதா என்ற கேள்வி பிரதனமாக எழுகிறது. பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியதால், அதிகாரம் மத்திய அரசுடையது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பேரறிவாளன் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது!
பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் தொடங்கியது.
2. கோவா விரைவில் முகக்கவசம் இல்லாத மாநிலமாக மாறும் - பிரமோத் சாவந்த்
கோவா விரைவில் முகக்கவசம் இல்லாத மாநிலமாக மாறும் என அம்மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்
3. சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தில் கைதான முக்கிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனால் அவரை சென்னை அழைத்துவர முடியவில்லை.
4. புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை
புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை.
5. 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.