அனல்பறக்கும் ஐபிஎல் களம் : முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான்- டெல்லி அணிகள் இன்று மோதல்..!! + "||" + Delhi Capitals aim to bounce back against Rajasthan Royals
அனல்பறக்கும் ஐபிஎல் களம் : முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான்- டெல்லி அணிகள் இன்று மோதல்..!!
ராஜஸ்தான் வெற்றிபெறும் பட்சத்தில் சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பு ஏறக்குறைய தகர்ந்துவிடும்.
மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி குஜராத் பிளே ஆபிற்கு முன்னேறிவிட்டது. அதே போல் 16 புள்ளிகளில் இருக்கும் லக்னோ அணியும் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
மீதம் இருக்கும் 2 இடங்களுக்காக ராஜஸ்தான், பெங்களூரு, ஐதராபாத், பஞ்சாப் அணிகள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த நிலையில் இன்று இரவு மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில்
ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்திலும், டெல்லி அணி 10 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் இன்று ராஜஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் சென்னை, கொல்கத்தா அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு ஏறக்குறைய தகர்ந்துவிடும். அதே நேரத்தில் இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் இந்த தொடர் மேலும் பரபரப்பான கட்டத்தை நோக்கி செல்லும்.