கிரிக்கெட்

"எனது ஆட்டத்தை அவர் ஞாபகப்படுத்துகிறார்"- ஐதராபாத் இளம் வீரரை பாராட்டிய யுவராஜ்..!! + "||" + He reminds me of myself a lot Yuvrajs praise for 21-year old IPL sensation

"எனது ஆட்டத்தை அவர் ஞாபகப்படுத்துகிறார்"- ஐதராபாத் இளம் வீரரை பாராட்டிய யுவராஜ்..!!

"எனது ஆட்டத்தை அவர் ஞாபகப்படுத்துகிறார்"- ஐதராபாத் இளம் வீரரை பாராட்டிய யுவராஜ்..!!
ஐதராபாத் அணியின் இளம் வீரர் தனது ஆட்டத்தை ஞாபகப் படுத்துவதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இவர் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக விளங்கியவர்.

இவர் சமீபத்தில் பிரபல கிரிக்கெட் தளத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தன்னை நினைவு படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து யுவராஜ் பேசுகையில், "அபிஷேக்  சர்மாவை பார்க்கும்போது, ​​அவர் என்னைப் பற்றி நிறைய ஞாபகப்படுத்துகிறார். அவர் அடிக்கும் புல் ஷாட், பேக்ஃபுட் ஷாட் போன்றவற்றை பார்க்கும்போது, நான் அவரைப் போலவே இருப்பதாக உணர்ந்தேன் " என யுவராஜ் தெரிவித்தார்.

பின்னர் சென்னை அணியின் வீரர் சிவம் துபே குறித்து பேசிய யுவராஜ் கூறுகையில், " சிவம் துபேவுக்கும் அதே போன்ற ஆட்டபாணி இருக்கிறது. ஆனால் அவர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அவருக்கு 28 வயது ஆகி விட்டது. அவர் எவ்வளவு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை. 

சிவம் துபே போன்றோருக்கு திறமை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அவர்களுக்கு நீங்கள் அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. நீங்கள் அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கினால் தான் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்" என யுவராஜ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர்ச்சியாக 8-வது முறை "போட்டியின் அதிவேகமான பந்தை" வீசி உம்ரான் மாலிக் சாதனை..!!
நேற்று குஜராத் அணி வெற்றி பெற்றாலும் ஆட்டநாயகன் விருது உம்ரான் மாலிக்கிற்கு வழங்கப்பட்டது.
2. ஐ.பி.எல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்? - இன்று மோதல்
அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி பெற்று கம்பீரமாக உள்ளது.
3. ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி
லக்னோ அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
4. ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது லக்னோ அணி
லக்னோ அணி 170 ரன்கள் இலக்கை ஐதராபாத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
5. ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி திணறல்
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி திணறி வருகிறது.