பிற விளையாட்டு

சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி தங்கம் வென்று சாதனை! + "||" + Cyprus International Athletics: India’s Jyothi Yarraji shatters 100m hurdles national record to win gold

சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி தங்கம் வென்று சாதனை!

சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி தங்கம் வென்று சாதனை!
சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை ஜோதி தங்க பதக்கம் வென்றார்.
லிமாசோல் [சைப்ரஸ்],

சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை ஜோதி தங்க பதக்கம் வென்றார். 

100மீ தடை தாண்டும் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்றார். ஜோதி 13.23 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இப்போட்டியில் சைப்ரஸின் நடாலியா கிறிஸ்டோபி 13.34 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கிரீஸ் வீராங்கனை அனாய்ஸ் கரகியானி 13.47 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதற்கு முன் அனுராதா பிஸ்வால் 13.38 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து , கடந்த 2002ம் ஆண்டு சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.