மாநில செய்திகள்

குரூப் 2 தேர்வு - முகக்கவசம் கட்டாயம்..! ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை..! + "||" + Group 2 Exam - Mask Mandatory ..! Ban on wearing smart watch ..

குரூப் 2 தேர்வு - முகக்கவசம் கட்டாயம்..! ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை..!

குரூப் 2 தேர்வு - முகக்கவசம் கட்டாயம்..! ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை..!
குரூப் 2 தேர்வின் போது தேர்வு எழுதுவோர் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் இன்று வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வருவோர் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசுப் பணியார் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.  மேலும் முகக்கவசம் அணிந்து வருவோர் மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். 

இதுபோன்று தேர்வு எழுத வருவோர் ஸ்மார்ட் வாட்ச்களை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.









தொடர்புடைய செய்திகள்

1. தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமல்ல - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தேர்வு அறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமல்ல என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. தொற்று அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்: மராட்டிய சுகாதார மந்திரி
தொற்று அதிகரித்தால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று மராட்டிய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.
3. பொதுத்தேர்வு எழுதும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் - தேர்வுத்துறை அறிவிப்பு
பொதுத்தேர்வு எழுதும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
4. தெலுங்கானா: பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்!
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.
5. பஞ்சாபில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாநில அரசு உத்தரவு
பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.