மாநில செய்திகள்

கோவில் திருவிழா - ராட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு...! + "||" + Temple Festival - A young man was electrocuted on the wheel ...!

கோவில் திருவிழா - ராட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு...!

கோவில் திருவிழா - ராட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு...!
தேனி அருகே கோவில் திருவிழாவின் போது ராட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்து உள்ளார்.
தேனி,

தேனி மாவட்டம் வீரபாண்டியில்கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகின்றது. இதனால் ராட்டினம் அமைப்பதற்காக உப்பார்பட்டியை சேர்ந்த முத்துகுமார் என்ற வாலிபர் இரும்பினால் ஆனா தூண் ஒன்றை தூக்கிச் சென்று உள்ளார்.  அப்போது எதிர்பாராத விதமாக இருப்பு தூண்  மின்சார கம்பியில் உரசியது. 

இதில் உடலில் மின்சாரம் பாய்ந்த முத்துகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செயல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் திருவிழாவின் போது ராட்டினத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. செல்போன் டவரின் உச்சியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு...!
வேலூர் அருகே 200 அடி உயர செல்போன் டவரின் உச்சியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
ஆம்பூர் அருகே மகள் வீட்டிற்க்கு சென்ற தாய் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி; டிரான்ஸ்பார்மரை மற்றொருவர் இயக்கியதால் பரிதாபம்
கயத்தாறு அருகே, மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியானார். அவரது உடல் அந்த மின்கம்பத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற வாலிபர்
வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர், நேரடியாக பக்கத்து வீட்டுக்குள் புகுந்து கட்டையால் அடித்து விவசாயியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையின் முகத்தை பார்க்கும் முன் அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
5. காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய வாலிபர்...!
நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை வாலிபர் காப்பாற்றி உள்ளார்.