உலக செய்திகள்

ரஷியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும்: இத்தாலி பிரதமர் + "||" + US and Russia need to talk, seek way out of Ukraine conflict -Draghi

ரஷியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும்: இத்தாலி பிரதமர்

ரஷியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும்: இத்தாலி பிரதமர்
மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் உதவ அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
ரோம்,

உக்ரைனில் நடக்கும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் பேச வேண்டும் என்று இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேற்று இத்தாலிய பிரதமர் மரியோ ட்ராகி சந்தித்து பேசிய நிலையில், இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

அமைதிக்கான பாதை மிகவும் சிக்கலானது என்பதை நானும் அதிபர் ஜோ பைடனும் உணர்ந்துள்ளோம். ஆனால், மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் உதவ அனைத்து கூட்டணி நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கான பல சாத்தியங்கள் உள்ளன. ஆனால் நாம் அந்த நிலைக்கு வருவதற்கு முன், முயற்சி செய்யப்பட வேண்டும். அனைத்து கூட்டணி நாடுகளும் செய்ய வேண்டிய முயற்சி உள்ளது. குறிப்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா, பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார், பினராயி விஜயன்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார்.
2. ரஷிய தாக்குதலில் சேதம் அடைந்த கட்டிடத்தில் இருந்து 44 பேர் சடலமாக மீட்பு: உக்ரைன் பகீர் தகவல்
கார்கிவ் பகுதியில் ரஷிய தாக்குதலில் சேதம் அடைந்த ஒரு கட்டிட இடிபாடுகளில் இருந்து 400 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கார்கிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3. போருக்கு மத்தியில் உக்ரைனில் ஜில் பிடன் -ஒலேனா ஜெலென்ஸ்கா சந்திப்பு
அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பிடன் உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்காவை சந்தித்தார்
4. ரஷியாவுடன் நல்லுறவு கொண்டிருந்தால் பாகிஸ்தான் மலிவான விலையில் எரிவாயுவை பெற்றிருக்க முடியும்: இம்ரான் கான்
பாகிஸ்தான் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷியாவிடம் இருந்து உறுதி செய்திருக்க முடியும் என்றார்.
5. உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவியை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.