கிரிக்கெட்

ஐபிஎல் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி + "||" + IPL: Delhi beat Rajasthan by a huge margin

ஐபிஎல் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி
இன்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதின
மும்பை,

 ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று  மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள்   மோதின 

 டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது 

தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,யாஸஷ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர் .பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .பின்னர் வந்த அஸ்வின் சிறப்பாக விளையாடினார் . அவருடன் இணைந்து ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று ஆடினார் .  அவர் 19 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் அதிரடியாக விளையாடினார் . மறுபுறம் சிறப்பாக விளையாடிய அஸ்வின் அரைசதம் அடித்து அசத்தினார்.அதன்பிறகு அவர் 50 ரன்களில்  ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் .விக்கெட்டுக்களை இழந்தாலும் படிக்கல் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.படிக்கல் 48 ரன்களில் ஆட்டமிழந்தார் .

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160  ரன்கள் எடுத்தது .தொடர்ந்து 161 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடியது .

தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் .ஸ்ரீகர் பரத் களமிறங்கினர் .தொடக்கத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் டேவிட் வார்னருடன் இணைந்து அற்புதமாக விளையாடினர் .ஒரு புறம் வார்னர் பொறுமையுடன் ஆட .மறுபுறம் மார்ஷ் அதிரடி கட்ட தொடங்கினார் .அவர் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டார் .தொடர்ந்து விளையாடிய மார்ஷ் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார் .

அரைசதம் அடித்த பிறகு வேகமாக ரன்கள் குவிக்க தொடங்கினார் மார்ஷ் இதன்பிறகு  சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ஷ் 62 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த  கேப்டன் ரிஷாப் பண்ட்  வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களை பறக்க விட்டார் .

இதனால் டெல்லி அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது .வார்னர்  அரைசதம் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் அரைசதம்
இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதுகின்றன.
2. ஐபிஎல் : டெல்லி அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்
இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதுகின்றன.
3. ஐபிஎல் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் அரைசதம்
இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதுகின்றன.
5. ஐபிஎல்: லக்னோ வெற்றிபெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் அணி
குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.