மாநில செய்திகள்

பட்டின பிரவேச விழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது + "||" + Hunger Entrance Ceremony: Starts today with flag hoisting

பட்டின பிரவேச விழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

பட்டின பிரவேச விழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மயிலாடுதுறை தருமபுரம் ஞானபுரீசுவரர் கோயிலில் பட்டின பிரவேச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் அமைந்துள்ளது. அந்த கோவிலில், பட்டின பிரவேசத்திற்கான பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இந்த திருவிழாவில், மே 18-ஆம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும், ஞானசம்பந்தர் குருபூஜையும் நடைபெறும்.இதையடுத்து, மே 20-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 21-ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, மே 22-ஆம் தேதி இரவு நடைபெறும் 11ஆம் நாள் விழாவில், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

அப்போது,  தருமபுரம் ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளுகிறார். இந்த பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி, சமீபத்தில் சர்ச்சையான நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
3. இலங்கையில் இன்று கடையடைப்பு போராட்டம்
இலங்கை அரசு பதவி விலக கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
4. தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்..!!
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
5. இன்று உலக புவி தினம் கடைபிடிப்பு..
பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் மற்றும் புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடன் உலக புவி தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது.