உலக செய்திகள்

இலங்கையில் 4 புதிய மந்திரிகளை நியமித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே + "||" + Four new Ministers sworn in

இலங்கையில் 4 புதிய மந்திரிகளை நியமித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில்  4 புதிய மந்திரிகளை நியமித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கையில் 4 புதிய மந்திரிகளை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார்.
கொழும்பு,

இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டை பதம் பார்த்துள்ளது. இதனால் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டத்தில் கடந்த 9-ந்தேதி வன்முறை மூண்டதால் 9 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். ஆனாலும் நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வந்தது.

மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் அடுத்தடுத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் (வயது 73) பிரதமர் பதவியை ஒப்படைத்தார். அவரும் நாட்டின் 26-வது பிரதமராக நேற்று முன்தினம் மாலையில் பதவியேற்றுக் கொண்டார்.ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரே எம்.பி.யாக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கே, 6-வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.அவர் நேற்று தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார்.

இந்த நிலையில், இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார். மந்திரிகளாக நியமிக்கப்பட்ட  ஜி.எல் பெரிஸ், தினேஷ் குணவர்த்தனே, பிரசன்ன ரணதுங்கே, காஞ்சனா விஜசேகர ஆகியோர் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். 
புதிய மந்திரிகளாக நியமிக்கப்பட்டவர்களின் துறை விவரம்

தினேஷ் குணவர்தனெ- பொது நிர்வாகம்
ஜி.எல் பெரிஸ்- வெளியுறவுத்துறை
பிரசன்னா ரணதுங்கா- நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி
காஞ்சனா விஜேசேகர- மின்சாரம் மற்றும் எரிசக்தி


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை பிரதமருக்கு வாக்கு கொடுத்த பிரிட்டன்
இலங்கை மக்களின் தேவைகளை நிறைவேற்ற ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசை ஊ​க்குவிக்கும் என இலங்கைக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.
2. இலங்கையில் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணும் முயற்சிக்கு ஆதரவு: சீனா
அரசியல் குழப்பத்துக்கு தீர்வு கண்டு, நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான இலங்கை அரசின் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறினார்.
3. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் இந்திய தூதர் சந்திப்பு
சவாலான தருணத்தில் இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்துப்பேசினார்.
4. புதிய அரசு அமைந்தாலும் இலங்கையில் நீடிக்கிறது போராட்டம்..!
இலங்கையில் புதிய அரசு அமைந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
5. இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே...?
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.