மாநில செய்திகள்

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் + "||" + NEET 2022: Registration ends on May 15, apply on neet.nta.nic.in

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
இள நிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்தற்கான கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 6 ந் தேதி தொடங்கியது. இதுவரை சுமாா் 20 லட்சம் மாணவ மாணவியா் இந்த தோ்விற்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2. “நீட் தேர்வு வயது வரம்பு நீக்கம்” - சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மருத்துவ கவுன்சில் தகவல்
நீட் இளநிலை தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
3. நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற நடைபெற்ற யாகம்...!
உடுமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற சிறப்பு யாகம் நடைபெற்றது.
4. நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணம் உயர்வு - தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வு விண்ணப்பக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
5. நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு
நீட் தேர்வு எழுதும் நேரம் 200 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.