கிரிக்கெட்

அவர் ஓய்வு பெறவில்லை :ராயுடுவின் முடிவு குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் + "||" + He did not get the review: Chennai team CEO's explanation about Rayudu's decision

அவர் ஓய்வு பெறவில்லை :ராயுடுவின் முடிவு குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம்

அவர் ஓய்வு பெறவில்லை :ராயுடுவின் முடிவு குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கம்
டுவிட்டரில் தனது ஓய்வு முடிவை அறிவித்த அவர், சிறிது நேரத்தில் அதனை நீக்கினார் ராயுடு.
மும்பை,

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி  வரும் அம்பத்தி ராயுடு, அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார். இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அம்பத்தி ராயுடு கூறியுள்ளது சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. 

தனது ஓய்வு முடிவு குறித்து ராயுடு கூறும்போது, “இது எனது கடைசி ஐபிஎல் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கேக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

டுவிட்டரில் தனது ஓய்வு முடிவை அறிவித்த அவர், சிறிது நேரத்தில் அதனை நீக்கினார், இதன்பிறகு அவர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

இந்நிலையில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தனியார் தொலைக்காட்சிக்கு  விளக்கம் அளித்துள்ளார் .

அதில் அவர் கூறியதாவது ;

சரியாக செயல்படாததால் சற்று அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார் . அதனால், தவறுதலாக அந்த டுவிட்டை பதிவிட்டுள்ளார் . அவர் ஓய்வு பெறவில்லை".அவர் எங்களுடன் இருப்பார்."என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல்: 4ஆம் இடத்திற்கு மல்லுக்கட்டும் 5 அணிகள்.. இறுதிகட்டத்தை நெருக்கும் பிளேஆப் ரேஸ்
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
2. ஐபிஎல் : புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி முன்னேற்றம்
நேற்று நடைபெற்ற 60வது லீக் போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின.
3. ஐபிஎல் : ரபாடா அபார பந்துவீச்சு : பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி
பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
4. ஐபிஎல் : விராட் கோலி புதிய சாதனை
இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
5. ஐபிஎல் : பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி தடுமாற்றம்
.இன்று நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.