தேசிய செய்திகள்

திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா + "||" + Tripura Chief Minister Biplab Deb Resigns A Year Ahead Of Elections

திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா

திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா
திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அகர்தலா, 

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்டிய பாஜக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்து வந்த பிப்லப் குமார் தேப் பதவி வகித்தார். 
அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை பேசுவதை வாடிக்கையாகக் கொண்டவர் இவர். 

கடந்த 2018- முதல் முதல் மந்திரியாக இருந்து வரும் பிப்லப் குமார் தேப் இன்று அம்மாநில கவர்னராக  உள்ள எஸ்.என். ஆர்யாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். 

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் உள்ள நிலையில், பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்தது அக்கட்சியின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உள்கட்சி பூசல் காரணமாக பிப்லப் குமார் தேப் பதவியில் இருந்து விலகியதாக அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

 பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்து விட்டு பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிப்லப் குமர் தேப், கட்சியை வலுப்படுத்த நன் பணியாற்ற வேண்டும் என்று கட்சித்தலைமை விரும்புகிறது” என்றார். 

திரிபுராவில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்ய இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. பாஜகவின் மேலிட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள புபேந்திர குமார் மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் திரிபுராவில் முகாமிட்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. திரிபுரா: ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு!
திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.
2. மதராசாக்களை மூட கோரிக்கை விடுத்த எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்
இஸ்லாமிய மத கல்வியை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனமான மூடவேண்டும் என்று கோரிக்கைவிடுத்த எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
3. கணவரின் தலையை துண்டித்து குடும்ப கோவில் முன் வைத்து சென்ற பெண்
கணவரின் தலையை துண்டித்து குடும்ப கோவில் முன் வைத்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
4. திரிபுரா: கண்மூடிதனமான தாக்குதலில் 2 மகள்கள் உள்பட 5 பேர் பலி
தனது இரு மகள்களையும் இரும்புக்கம்பியால் தாக்கி கொன்றுள்ளார்.
5. திரிபுராவில் பா.ஜனதா-திரிணாமுல் காங்கிரசார் மோதல் - 19 பேர் காயம்
திரிபுராவில் பா.ஜனதா-திரிணாமுல் காங்கிரசார் இடையே நடந்த மோதலில் 19 பேர் காயம் அடைந்தனர்.