கிரிக்கெட்

பந்துவீச்சில் வேகம் மட்டும் போதாது -உம்ரான் மாலிக் குறித்து ஷமி கருத்து + "||" + Speed ​​alone is not enough in bowling - Shami comments on Umran Malik

பந்துவீச்சில் வேகம் மட்டும் போதாது -உம்ரான் மாலிக் குறித்து ஷமி கருத்து

பந்துவீச்சில் வேகம் மட்டும் போதாது -உம்ரான் மாலிக் குறித்து ஷமி கருத்து
ஹைதராபாத் அணிக்காக உம்ரான் மாலிக் விளையாடி வருகிறார்
மும்பை, 

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஹைதராபாத் அணிக்காக உம்ரான் மாலிக் விளையாடி வருகிறார் 

தொடர்ந்து மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி பேட்ஸ்மன்களை  அச்சுறுத்தி வருகிறார் .அதிக பட்சமாக மணிக்கு 157  கிலோ மீட்டர் வேகத்தில் அந்த பந்துவீசி  நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய  சாதனை உம்ரன் மாலிக் படைத்துள்ளார் .

இந்த தொடரில்  உம்ரன் மாலிக் இதுவரை 15 விக்கெட் வீழ்த்தியுள்ளார். .அதிவேகமாக பந்து வீசினாலும் சில போட்டிகளில் ரன்களை வாரி வழங்குகிறார்,

இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து குஜராத் அணியின் வேகபந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளதாவது .

உம்ரான் மாலிக்  வேகமாக பந்து வீசுகிறார். ஆனால் என்னை பொறுத்தவரை , நான் வேகத்திற்கு பெரிய ரசிகன் கிடையாது. 140 கிமீ வேகத்தில் இரு பக்கமும் ஸ்விங் செய்ய  தெரிந்தால் போதும். பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுத்துவிடலாம். அவர் வேகமாக பந்துவீசுகிறார்.அது மட்டும் போதாது. அவர் கற்றுக்கொள்ள இன்னும் காலம் தேவை .இவ்வ்வாறு தெரிவித்தார் 

தொடர்புடைய செய்திகள்

1. "வேகம் மட்டுமே முக்கியமில்லை"- உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் இந்திய வீரர் கருத்து
உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் பிரபல இந்திய வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
2. பிரம்மிக்க வைக்கும் வேகம் : நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசி உம்ரான் மாலிக் சாதனை
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசி உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்
3. ஐபிஎல் : உம்ரான் மாலிக்கை பாராட்டிய கங்குலி..!
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
4. "உம்ரான் மாலிக்கை அதிகம் பயன்படுத்தினால் இது நேரிடும் "- பிசிசிஐ-க்கு பிரபல வீரர் அறிவுரை..!!
பிசிசிஐ உம்ரான் மாலிக்கை கவனித்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் அறிவுரை தெரிவித்துள்ளார்.
5. தொடர்ச்சியாக 8-வது முறை "போட்டியின் அதிவேகமான பந்தை" வீசி உம்ரான் மாலிக் சாதனை..!!
நேற்று குஜராத் அணி வெற்றி பெற்றாலும் ஆட்டநாயகன் விருது உம்ரான் மாலிக்கிற்கு வழங்கப்பட்டது.