வர்லாம் ... வர்லாம் வா...! காலையில் வெயில் மாலையில் மழை...! இது தான் இனி சென்னை டிரெண்ட்- தமிழ்நாடு வெதர்மேன் + "||" + trend in coming days for Chennai Always carry an umbrella-tamilnadu weatherman
வர்லாம் ... வர்லாம் வா...! காலையில் வெயில் மாலையில் மழை...! இது தான் இனி சென்னை டிரெண்ட்- தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை இனி வரும் காலங்களில் வானிலை எப்படியிருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை
அசானி புயலுக்கு பிறகு தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை இனி வரும் காலங்களில் வானிலை எப்படியிருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
வர்லாம் ... வர்லாம் வா... இன்று காலை வெயிலுக்கு பிறகு சென்னையில் இருட்டிக் கொண்டு வரும் மழை, இனி சென்னையின் டிரெண்ட் இதுதான். காலையில் வெயில் அடித்தாலும் கையில் குடையோட போங்க என வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார்.
Varlaam Varlaam Vaa !!!! After a hot day followed by thunderstorms, this will be the trend in coming days for Chennai. Always carry an umbrella when sun shines in the morning.
அந்தமான் நிக்கோபார் தீவு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.